I have good Understanding with Saran - Ajith
Home > Interviews > I have good Understanding with Saran - Ajith January 28th, 2010By Malarvannan for Ajithfans.Com (28-1-2009)
நடிகர் அஜித் அசல் படத்தை முடித்துவிட்டார் அஜீத். இதுவரை ஹீரோவாக அறியப்பட்டவர், இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என மூன்று துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
ஏன்?
நடித்ததுடன் என் வேலை முடிந்தது என இருப்பதைவிட, என் படத்துக்கு நான் அக்கறை காட்ட விரும்புகிறேன். இயக்குனர் சரண், கதாசிரியர் யூகி சேது ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். என்னை டெக்னீஷியனாகவும் மதித்து இந்த வாய்ப்பை அளித்த சிவாஜி புரொடக்ஷனுக்கு நன்றி. சிவாஜி புரொடக்ஷனில் நடிப்பது எனக்குப் பெரிய கௌரவம். ஒவ்வொரு முறையும் அன்னை இல்லத்திற்கு நான் செல்லும்போது அவர்கள் என்னை வரவேற்று உபசரிக்கும்விதம், காட்டும் அன்பு, பணிவு இதெல்லாம் அன்னை இல்லத்தின் பாரம்பரித்தைக் காட்டும்.”
அசல் பற்றி?
இதில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட், காமெடி என அனைத்து அம்சங்களுமே இருக்கும். அதற்குள் அப்பா, மகன் என்ற கான்செப்ட் முக்கியமானது. சரணுடன் இது எனது நான்காவது படம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அது இப்படம் நல்ல முறையில் உருவாக உதவியிருக்கிறது. சமீரா ரெட்டி, பாவனா ஹீரோயின்கள். பிரபு, சுரேஷ், சம்பத் என பலர் நடித்துள்ளனர். பிரான்சில்தான் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது தமிழ் சினிமாவுக்கு ஃபிரஷ்ஷான லொகேஷனாக இருக்கும். என்னைப் பொருத்தவரை நல்ல படத்துக்கு விளம்பரமே தேவையில்லை என கூறுவேன். அசல் அந்த மாதிரியான படம்தான்.
இதில் இரட்டை வேடமாமே?
ஆமாம். எனது வேடத்துக்கு இணையாக ஒரு வேடம் உள்ளது. அதில் யாரை நடிக்க வைக்கலாம் என சரண் குழப்பத்தில் இருந்தார். நானே நடிக்கிறேனே என்றேன். இன்னொரு கெட்அப்பில் நடித்தபோது சரணுக்கும் திருப்தியாக இருந்தது.
படத்தின் ஹைலட்?
நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணருவார்கள். நீரவ்ஷாவின் உதவியாளர் பிரசாந்த் மிஸ்சாலேயை பில்லாவில் பணியாற்றும்போது பார்த்தேன். அவரை இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தலாமே என யோசனை கூறினேன். சரண் அதை ஏற்றுக்கொண்டார். அவரது ஒளிப்பதிவு படத்துக்கு ஹைலட்டாக இருக்கும். பரத்வாஜின் இசை முக்கிய அம்சம். எங்கே எங்கே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் நிறைய பேர் எனது முதுகில் குத்தினார்கள். இந்த பாடலில் அதன் வலி இருக்கிறது.
விமர்சனங்கள்?
இப்பொழுதெல்லாம் என்னைப் பற்றி யாராவது தவறாக அபிப்பிராயம் சொன்னால், நான் அதற்குத் தேவையில்லாமல் விளக்கம் கொடுப்பது இல்லை. நமக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட காரணமே இல்லாமல் நமக்கு பிடிக்காது. இதேபோல் என்னையும் சில பேருக்கு பிடிக்காமல் போகலாம். அதில் தவறில்லை. ஆனாலும் நான் அவர்களை மதிக்கிறேன். நான் எவ்வளவு நல்லது பண்ணினாலும் சிலரை சந்தோஷப்படுத்த முடியாது. இது என் வாழ்க்கையில் நான் ஏற்றுக்கொண்ட விஷயம். அதனால் தற்போது டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்
அரசியல்?
என் ரசிகர்களுடனும் நேரடித் தொடர்புடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் என் ரசிகர் மன்றங்களை சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு வகையில் ஸ்டாக் எடுப்பது போலதான். இந்த முயற்சிகளில் இறங்கியதால், நானும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று பேச்சுக் கிளம்பியதில் ஆச்சர்யமில்லை. உண்மையில் தேர்தலின் போது வரிசையில் நின்று ஓட்டுப்போடுகிற சராசரி மனிதன் நான். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை
ரசிகர் மன்றம்?
கடந்த சில மாதங்களாக எனது அகில இந்திய அஜீத்குமார் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் என்னுடைய செயலாளரும், நமது இயக்கத்தின் தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா வாயிலாக பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். இயக்கத்தின் பணி சமூக சேவைகளில் ஈடுபடுவது மட்டுமே. சீரமைப்பு பணிகள் முழுவதுமே என்னுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது மாநில நிர்வாகி சுரேஷ்சந்திரா என்னுடைய எண்ண ஒட்டத்தை தான் செயல்படுத்துகிறார்.

January 29th, 2010 at 11:10 am
Thala we got only less screens in chennai - 11 only . Please friends make it alteast 20 that is our thala style and collection will be huges if its more screen..
January 29th, 2010 at 9:56 pm
thala rocks
January 31st, 2010 at 10:39 am
AJITH POLA VARUMA
January 31st, 2010 at 11:13 am
thala roks